2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி (UPDATE)

George   / 2017 ஜனவரி 27 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

  4.10pm ‘விவசாயி மகன், ஜனாதிபதியாக உள்ளபோது, வேலை தெரியாத அரசாங்கம், விவசாய மக்களை நாசம் செய்துள்ளது. அதன்காரணமாக, வயலில் விவசாயம் செய்ய முடியாதளவு இறைவனின் சாபம் கிடைத்துள்ளது” -ரொஷான் ரணசிங்க

4.06pm ‘மஹிந்த ராஜபக்ஷவின்  மீதான நன்றி பாராட்டுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என கருணா அம்மான் சிங்கள மொழியில் தெரிவித்துள்ளார்.

4.05pm முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), பேரணியில் தமிழில் உரையாற்றினார்.

3.03pm  "மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மூன்று நேரம் சோறு சாப்பிட்ட மக்கள், இப்போது பலா இலை மற்றும்  க்ரோட்டன் இலையை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது " - டபிள்யூ எம்.பியதாஸ.

2.50pm மழையுடன் கூடிய காலநிலைய ஊடகவியலாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஊடகவியலாளர்களின் எதிர்ப்பையடுத்து ஒரு சிலருக்கு ஆசனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

2.46pm "தற்போதைய அரசாங்க பயங்கரவாதம் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலேயே இடம்பெறுகிறது" - பெங்கமுவே நாலக்க தேரர்.

2.42pm பெங்கமுவே நாலக்க தேரரால் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.2.31pm “புரட்சிகர ஆரம்பம்” பேரணியை ஆரம்பிக்க வட்டினாபஹ சோமானநந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் ஆசி வழங்குகின்றனர்.

2.29pm பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க வந்துவிட்டார்கள்.

2.20pm ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஆட்சிக் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்ஷவை கொளரவப்படுத்தி கூறிய கருத்துகள் ஒளிபரப்பட்டது. கூட்டத்தினர் குரல் எழுப்பினார்கள்.

2.18pm  முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும வந்துவிட்டார்.

2.16pm மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரும் வந்தடைந்துள்ளனர்.

2.14pm ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள பேரணிக்காக, நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .