2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி

Mayu   / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - தாழ்வுபாடு, தாராபுரம் வீதியிலுள்ள 'துர்க்கி சிட்டி' கிராமத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை, உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வருடம் மற்றும் ஆறு மாதங்கள் (18 மாதங்கள்) வயதுடைய ஆண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .