2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஒரு மாதத்தில் 6,508 டெங்கு நோயாளர்கள்

Niroshini   / 2017 ஜனவரி 29 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம், மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6,508 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவற்றுள்  43 சவீதமான டெங்கு நோயாளர்கள், மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 1,828 டெங்கு நொயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலேயே ஆகக்குறைவான டெங்கு நோயாளர்கள் (22 பேர்) இனங்காணப்பட்டுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பின், வைத்தியரிடம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .