2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஒருவரை கடத்துகிறது கனடா

Kogilavani   / 2017 ஜனவரி 18 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு, நிதிசேகரித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மாணிக்கவாசகம் சுரேஷ் என்ற இளைஞனை, அந்நாட்டு அரசாங்கம் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், நாடு கடத்தவுள்ளதாக வெளிநாட்டு செய்தி தெரிவிக்கிறது.  

விடுதலைப் புலிகளுக்காக, நிதி சேகரித்தார் என்றே அவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்து. அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நீதிமன்றம், அவரை நாடுகடத்துமாறு உத்தரவிட்டிருந்தது.  

எனினும், அந்த உத்தரவை எதிர்த்து, அவர் மேன்முறையீடு செய்திருந்தார். அம்மனு நிராகரித்த கூட்டரசு நீதிமன்றம், அவரை நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.   

இதேவேளை, புலிகள் அமைப்புக்கு நிதியைத் திரட்டினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மாணிக்கவாசகம் சுரேஷுக்கு எதிரான ஆதாரங்களை கனடாவின் குடிவரவு சபையும் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .