Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு தலைவரின் கீழ் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது போனால், இரண்டு தலைவர்களின் கீழ் எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் பிரச்சனைகளுக்கும் முகங்கொடுக்க தயாராகவுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அனைத்து மக்கள் சக்தியையும் ஒன்று திரட்டியுள்ளதாகவும் அதனூடாக எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலுக்கு மிகவும் பலத்துடன் போட்டியிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் விடயத்தில் சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதென்றாலும் இறுதியில் அனைவரும் ஒரே முடிவுக்கும் ஒரே தலைவரின் கீழ் வரவுள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவபிரிய தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago