Freelancer / 2026 பெப்ரவரி 12 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பல பொருட்களை கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (11) மாலை விசாரணை அதிகாரிகளால் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவென வீதிப் பகுதியிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.
அந்த வீட்டில் இருந்து, 10 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 இலட்சம் ரூபா பணம், துப்பாக்கி, தோட்டா, மோட்டார் சைக்கிள்களுக்குப் பயன்படுத்தப்படு போலி வாகன இலக்கத் தகடுகள் 08, முச்சக்கர வண்டி முன் மற்றும் பின் பக்க போலி இலக்கத் தகடுகள் 04, மோட்டார் வாகன முன் மற்றும் பின் பக்க போலி இலக்கத் தகடுகள் 18, இலத்திரனியல் தராசு, தங்க சங்கிலிகள் 02, தங்க வளையல் ஒன்று, தங்க மோதிரம் ஒன்று என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்கண்ட சொத்துக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்தச் சந்தேகநபருக்கு கிடைத்துள்ளமை தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
19 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago