2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'ஒலி, ஔிபரப்புக்கான நேரத்தை சரியாக பயன்படுத்தவும்'

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒலி, ஔிபரப்புக்கான நேரத்தை பயன்படுத்தி ஏனைய வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ​தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஒலி, ஔிபரப்பிற்கான நேர ஒதுக்கீட்டுக்கு அமைய, அரச தொலைக்காட்சி மற்றும் அரச வானொலி ஊடாக உரைநிகழ்த்துவதற்கு 45 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.

வேட்பாளர் ஒருவரின் உரையைப் பதிவுசெய்து அதனை பரிசோதித்த பின்னர் ஒலி, ஔிபரப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், பதிவு செய்யப்பட்ட உரை வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமையும் பட்சத்தில் அதனை ஒலி, ஔிபரப்பு செய்யாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .