J.A. George / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்லும் பஸ்களில் இன்று (05) முதல் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பயணிக்கவுள்ளனர்.
பஸ் சாரதிகளில் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்று (04) வாகன விபத்துகளில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் அதிகளவானவை மோட்டார் சைக்கிள் விபத்துகள் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் தகவலுக்கு அமைய ஏப்ரல் 10 முதல் 20ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாட்டில் அதிக விபத்துகள் பதிவாகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .