2025 மே 22, வியாழக்கிழமை

கைகலப்பில் யாசகர் பலி

Thipaan   / 2016 ஜனவரி 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் புறநகர்ப் பகுதியான நவகமுவவில் யாசகர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதான யாசகரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற சம்பவத்தில், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் யாசகம் செயயும் இரண்டு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X