2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கொட்டாஞ்சேனை கடத்தல்: கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனையில், கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, கடற்படையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தரத்தைச் சேர்ந்த அதிகாரி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிசறை, கடற்படை வைத்தியசாலையில் கடமையாற்றும் அதிகாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, 2009  ஜனவர் 11 ஆம் திகதியன்று வடிவேல் லோகநாதன் மற்றும் அவருடைய மைத்துனனான ரத்னசாமி பரமானந்தன், ஆகிய இருவரையும் கடத்தி, காணாமல் போகச்செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .