2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காதலில் மனக்கவலை; இளைஞன் குத்திக்கொலை

Princiya Dixci   / 2015 நவம்பர் 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- காஞ்சன குமார ஆரியதாஸ, மொஹொமட் ஆஸிக்

இளைஞர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மனக்கவலையினால் இளைஞன் ஒருவன் குத்திக்கொலைச் செய்யப்பட்ட பரிதாபகரமான சம்பவமொன்று, ஹபரணை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கத்தியால் குத்திய இளைஞன் தற்கொலைக்கு முயற்சிசெய்து தோற்றுபோன நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

இவ்விரு இளைஞர்களும் நீண்ட நாட்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அவ்விருவரும் சேர்ந்து ஹபரணை 5ஆம் மைல்கல்லுக்கு அருகிலுள்ள கற்பாறைக்கு நேற்று 10ஆம் திகதி சென்று மதுபானம் அருந்தியுள்ளனர். இதன்போதே, ஒருவரை குத்திக்கொன்ற மற்றொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தனது நண்பனை கத்தியால் குத்திவிட்டு, தற்கொலைக்கு முயன்றவர், இன்று அதிகாலை, தன்னுடைய வீட்டுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் தனது நண்பனை கொலை செய்துவிட்டதாகவும் தானும் தற்கொலை செய்துகொல்வதற்கு முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. 

அதனடிப்படையில் ஹபரனை பொலிஸார், அந்த கற்பாறைக்கு சென்றபோது ஒருவரை சடலமாக மீட்டுள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தாங்கள் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்ததாகவும் , மரணமடைந்த தனது நண்பன், யுவதியொருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டார். இதனை தாங்கிக்கொள்ளமுடியாமல் நண்பனை குத்திக்கொலைச்செய்துவிட்டேன் என்று வாக்குமூலமளித்துள்ளார்.

இவ்விருவரும் இவ்விருவரின் வீடுகளுக்கும் அடிக்கொரு தடவை சென்றுவருவதாகவும்  தெரியவருகின்றது. 

சம்பவத்தில், ஹபரணை ஜயசேன்கமவை வசிப்பிடமாக கொண்ட சுற்றுலா ஹோட்டலில் கடமையாற்றும் 22 வயதான எச்.ஒஷான் விதுரங்க என்பவரே மரணமடைந்துள்ளார். 

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்தின் 24 வயதுடைய ஊழியரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X