2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கைப்பைகள் திருட்டு: பெண்களை கைதுசெய்ய நடவடிக்கை

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகமைக்கு உட்பட்ட கைப்பை விற்பனை நிலையமொன்றில், கைப்பைகள் இரண்டை திருடிய பெண்கள் மூவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

மேற்படி விற்பனை நிலையத்துக்கு  கைப்பைகள் வாங்குவதற்காகச் சென்ற கர்ப்பிணி ஒருவர் உட்பட மூன்று பெண்கள், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 4000 ரூபாய் பெறுமதியான இரண்டு கைப்பைகளை திருடிச் சென்றுள்ளதாக, விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  

விற்பனை நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவின் உதவியுடன் மேற்படி பெண்களை அடையாளங்கண்டுகொண்ட பொலிஸார், அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பெண்களை அடையாளங்கண்டவர்கள், 071-8591081 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X