2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கௌரவத்துக்கு களங்கம்: ஒன்றிணைந்த எதிரணி ஆவேசம்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்தின் இரண்டு டிபெண்டர் வாகனங்களை மறைத்து வைத்துள்ளதாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தோட்டத்தில் பொலிஸார் தேடுதலை நடத்தியதால், அவருடைய கௌரவத்துக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.   

நாடாளுமன்றத்தில் நேற்று, சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.   அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “குமார வெல்கமவின் மத்துகம டெனிஸ்டர் தோட்டத்தில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர், இந்த தேடுதலை நடத்தியுள்ளனர். அதிகாரிகள், பெரிய குற்றவாளிகளைக் கைது செய்வது போல், பகிரங்க தேடுதல் அனுமதியை பெற்றுக்கொண்டே, தோட்டத்தில் சோதனை நடத்தியுள்ளனர்” என்றார்.   

“எதனைத் தேடுகிறார்கள் என்பதைக் கூட, இந்த அதிகாரிகள் கூறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது, சபாநாயகரின் கடமை” என, பந்துல குணவர்தன ஆவேசமாக குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X