2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொலை சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிசெம்பர் மாதம் இடம்பெற்ற கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் , ​பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி,  வெயாங்கொடை - கட்டுநாயக்க வீதியில் வெயாங்கொடை ரயில் குறுக்கு வீதியில் ஜானக்க சமன் எனும் நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர், காரொன்றில் வந்து இறங்கி, துப்பாக்கியை எடுத்து சுடும் காட்சிகள், வீதியில் இருந்த சீ.சீ.டிவி கமெராவில் பதிவாகியிருந்தன.

அதனையடுத்து, சந்தேக நபரை கைதுசெய்யும் நடவடிக்கையை  மேல் மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், சம்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்,  நேற்று  முற்பகல் 11.30 மணியளவில்  வீரகுல, யக்கல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக ​பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள அடங்கிய மெகசின் மற்றும் 4 துப்பாக்கி ரவைகள் என்பனவும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் கைதுப்பற்றியுள்ளனர்.

வீரகுல, யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  அவரை, அத்தனகல்ல மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .