2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

குழியில் விழுந்த பிரதியமைச்சர்

Niroshini   / 2017 ஜனவரி 30 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்நடைத் திருடர்களைப் பிடிக்கச்சென்ற பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும, குழியொன்றில் தவறி விழுந்த நிலையில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இறைச்சியாக்குவதற்காக மாடுகளை ஏற்றிச்செல்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பிரதியமமைச்சர் பாலித தெவரப்பெரும, மேலும் சிலருடன் இணைந்து, களுத்துறை - அலுத்கம நகரத்துக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, மாடுகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை மடக்கிப்பிடிப்பதற்காக, பாலித தெவரப்பெரும தனது சகாக்களுடன் துரத்திச்சென்றுள்ளார்.

இதன்போது மாடுகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை பிரதியமைச்சர் நிறுத்திய நிலையில், அதன் சாரதியை வெளியே இழுத்து வீழ்த்தினார். இந்நிலையில், பாரவூர்தியில் இருந்த சிலர் பாரவூர்தியில் ஏறித் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

தப்பிச் சென்றவர்களைப் பிடிப்பதற்காக பின்தொடர்ந்த

தெவரப்பெரும, அருகில் இருந்த கால்வாய் ஒன்றில் வீழ்ந்துள்ளார். இதனால், அவரது காலில் அடிபட்டுள்ளது. அவருடன் சென்றவர்கள், வாகனத்தை தடுத்து நிறுத்தி, சந்தேகநபர்களையும் பிடித்துள்ளனர்.

பின்னர், சந்தேகநபர்களும் வாகனமும், பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், மதுகம, முன்ஹென்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .