2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கீழே விழுந்து இலங்கை அகதி மரணம்

George   / 2016 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு புதுவை மாவட்டத்தின் காலாப்பட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டஇலங்கை அகதி, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார்.

கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சங்கர் (வயது 51) என்ற கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காலாப்பட்டில் ஒரு கட்டடம் கட்டும் பணியில் சங்கர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மாடிப்படியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சங்கர் கால் தவறி கீழே விழுந்துள்ளார்

சம்பவத்தில் படுகாயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி  சங்கர் பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் காலாப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .