2025 ஜூலை 09, புதன்கிழமை

கஞ்சிபான இம்ரானின் சிறைக் கூடத்திலிருந்து அலைபேசி மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான “ ஊரு ஜுவா“ , கஞ்சிபான இம்ரான்  ஆகியோரின் சிறைக் கூடங்களிலிருந்து ​அலைபேசியொன்று, சிம் அட்டைகளும் இன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட பொருள்கள் சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊரு ஜுவாவின் சிறைக்கூடத்திலிருந்து அலைபேசியும் கஞ்சிபான இம்ரானின் சிறைக் கூடத்திலிருந்து ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவை மீட்கப்பட்டிருந்ததாகவும் 27 புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட குழுவால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .