2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இந்தோனேஷியப் பிரஜை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 27 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

இந்தோனேஷியப் பிரஜை ஒருவருக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்ததாக கட்டுநாயக்கா பொலிஸார் தெரிவித்தனர்.

சவூதி அரேபியாவிலிருந்து இந்தோனேஷியா நோக்கிப்  பயணித்துக்கொண்டிருந்த 57 வயதுடைய இவர்,  கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கி இந்தோனேஷியாவுக்குச் செல்வதற்கான விமானத்தில் மாறி ஏறுவதற்காக கட்டுநாயக்காவில்  காத்தருந்த  வேளையில் மாரடைப்புக்கு உள்ளாகி கீழே விழுந்து உயிரிழந்தார்.  

இவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .