Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாட்டுக்காக கட்சியின் நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கட்டாய உயர்பீடக் கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தக் கூட்டத்தில், தலைவர் ரவூப் ஹக்கீமை ஆரத் தழுவிவிட்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹஸன் அலி வெளிநடப்புச் செய்ததாவும் அவரோடு சேர்ந்து பத்துக்கும் அதிகமான உயர்பீட உறுப்பினர்கள் வெளியில் சென்றதாகவும், அதனைத்தொடர்ந்து கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
அந்தச் செய்தி தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பிரிவு அனுப்பிய மறுப்பு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“குறிப்பிட்ட கூட்டத்தில், ஹஸன் அலியிடம் தவிசாளர் பதவியை ஏற்கும்படி தலைவர் உட்பட உயர் பீட உறுப்பினர்கள் அனைவரும் அன்போடு வேண்டினார்கள். அந்த வேண்டுதல் தொடர்ந்தநிலையில், அவர் தலைவரை ஆரத் தழுவி நெற்றியில் முத்தமிட்டு, தலைவரின் அனுமதியைப் பெற்று வெளியில் சென்றார்.
“அப்போது அவரை செல்லவிடாது மீண்டும் கூட்ட இடத்துக்கு அழைத்துவரும் நோக்குடன், உயர்பீட உறுப்பினர்கள் ஐந்தாறு பேர், வெளியில் சென்று அவருடன் பேசினர்.
“அவர் வராது சென்றதும், வெளியில் சென்றவர்கள் மீண்டும் கூட்ட மண்டபத்தினுள் வந்து, தொடர்ந்து சுமுகமாக நடந்து கொண்டிருந்த கூட்டத்துடன் இணைந்து கொண்டார்கள்.
“எனவே மேற்படி சம்பவத்தினால் குறிப்பிட்ட கட்டாய உயர்பீடக் கூட்டம் இடைநிலையில் நிற்காது சுமுகமாகத் தொடர்ந்து நடந்ததோடு, பேராளர் மாநாட்டுக்கான கட்டாய உயர்பீடத் தீர்மானங்கள் யாவும் முழுமையாகவும் எதுவித குழப்பமின்றி எடுக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது என்பதை அறியத் தருகின்றோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago