2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கட்டணத்தைக் குறைத்தால் இலவச மின்சாரம்

Menaka Mookandi   / 2016 மார்ச் 29 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 'மின்சாரப் பரிசு' வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, 'கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்' என்று கூறினார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .