2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கடந்த வருடத்தில் 650 ட்ரோன் விபத்து

George   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடத்தில் 650 ட்ரோன் கமெராக்கள் விபத்துக்குள்ளாகியதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுவரை ட்ரோன் கமெராக்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த வருடத்தில் 95 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன், அதில் பாரியளவான விபத்துகள் 5 பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பாரிய விபத்துகளில் 179பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த 10 வருட காலத்துக்குள் இலங்கையில் எந்தவொரு பயணிகள் விமான விபத்தும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்று இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட போது இவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .