Nirosh / 2021 மார்ச் 28 , பி.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலனியினால் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பால்பண்ணை கிராமத்தில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விழிப்புணர்வை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பால்பண்ணை கிராமத்தில் நேற்றைய தினம் 51 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இன்றைய தினம் அப்பகுதி கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அப்பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் சூரிய ராஜ் தலைமையிலான அனர்த்த முகாமைத்துவ குழுவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டை கண்காணிப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .