Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 24 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கீதபொன்கலன்
கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில், ஆடி அமாவாசை பித்ரு கடமைகளை வியாழக்கிழமை (24) செய்தவர்கள் தானமாக வழங்கிய 100 கிலோ கிராமுக்கும் அதிகமான மரக்கறிப் பொருட்கள் மற்றும் பூஜை செய்வதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பவற்றை ஏற்றிச் செல்ல வந்த முச்சக்கர வண்டியை,பொருட்களை ஏற்ற விடாது தடுத்து அந்த இடத்தில் இருந்து முச்சக்கரவண்டியை வெளியேற்றி,அடாவடியில் ஈடுபட்டார் அப்பகுதியில் உள்ள பெளத்த பிக்கு.
சிவன் கோவிலில் ஆடி அமாவாசை பிதுர்கடன் நிறைவேற்றுவதற்கான பூஜைகள் காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை நடத்துவதற்குரிய அனுமதி உத்தியோகபூர்வமாக ஏற்பாட்டுக் குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10.55 மணியளவில் பூசைகளில் ஈடுபட்டிருந்த பூசகர்கள் தமக்கு தானம் வழங்கப்பட்ட பொருட்களை ஏற்றுவதற்கு முச்சக்கர வண்டி ஒன்றை அழைத்த போது பெளத்த பிக்கு அங்கு வந்து வாகனத்தை வெளியில் கொண்டு போகுமாறு வாகன சாரதியை ஏசியுள்ளார்.
பூஜை நடைபெற்ற கோயிலுக்கு கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் பிரதான வாசலுக்கு இடையில் சுமார் 150 மீட்டர் தூரம் உள்ளது.இதனை அடுத்து மிகுந்த சிரமத்துடன் பொருட்கள் அனைத்தும் அங்கிருந்த பூசகர்கள் மற்றும் பக்தர்கள் ஒரு சிலரால் தூக்கி செல்லப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டது.இது தொடர்பில் பித்ரு கடன் செலுத்த வந்தவர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதே வேளை இன்று காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை இங்கு 300 இற்கும் அதிகளவான பக்தர்கள் ஒன்று கூடி தமது உறவினர்களுக்கு பித்ரு கடன்களை நிறைவேற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .