2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கப்பம் கோரியவர் மீது கத்திக் குத்து

Editorial   / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி- டிக்சன் சந்திக்கருகில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், தொடர்ச்சியாக கப்பம் கோரி வந்த நபரொருவரை, குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் கத்தியால் குத்தியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று (26)இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர், கராப்பிட்டிய வைத்திசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

காலி ​–வெலிவத்தை பகுதியைச் சேர்ந்த, 26 வயதுடைய நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னிடம் வந்து, இரண்டு இலட்சம் ரூபாயை கப்பமாக செலுத்துமாறு வற்புறுத்தி வந்ததால் , குறித்த நபரை கத்தியால் குத்தியதாக, வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .