2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணிகளே கவனம்

Thipaan   / 2016 மார்ச் 27 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வெப்பநிலை காரணமாக கர்ப்பிணிகள், சுத்தமான தண்ணீரை அடிக்கடி பருகவேண்டும் என்று மகப்பேற்றியல் மற்றும் குழந்தை நல வைத்திய நிபுணர் ருவன் சில்வா தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் வெப்பநிலை சாதாரணமாக 37.5 செல்சியஸ் பாகையாகும். அந்த வெப்பநிலை, 38 செல்சியஸ் பாகையாகவோ அல்லது அதற்கு மேல் கூடினாலோ, கர்ப்பப் பையில் இருக்கின்ற கருவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தவும் கருவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல, கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் வெப்பநிலையானது 38 பாகை செல்சியஸில்

இருக்குமாயின், கர்ப்பிணிகளின் உடலுக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் சுத்தமான குடிநீரைக் கட்டாயம் பருகவேண்டும். அவ்வாறு செய்;தால், தாய்க்கும் கருவுக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

அத்தோடு, அசாதாரண நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள வைத்தியரை உடன்நாடுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .