2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கரன்னாகொட வழக்கிலிருந்து நீதியரசரொருவர் விலகல்

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், தன்னைக் கைதுசெய்வதற்கு எதிரான உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, எதிர்வரும் 7ஆம் திகதி பரிசீலிப்பதாக,  உயர் நீதிமன்றம் இன்று (28) அறிவித்தது.

பிரதம நீதியரசர் நலின் பெரேரா, நீதியரசர்களாக பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில், இந்த மனு இன்று, பரி​சீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனிப்பட்ட காரணத்துக்காக, இந்த வழக்கில் தன்னால் கலந்துகொள்ள முடியாதென, நீதியரசர் பிரியந்த ஜயவர்தன அறிவித்தார். இதனைத் தொடர்ந்தே, இந்த மனு மீதான பரிசீலனை, மார்ச் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .