2025 ஜூலை 09, புதன்கிழமை

கரன்னாகொடவுக்கு 4ஆவது நோட்டீஸ்

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறிப்பிட்ட தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாமை தொடர்பில், அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு, இன்று (24) நான்காவது முறையாகவும் நோட்டீஸ் அனுப்புமாறு, மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.

2008 - 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், கொழும்பில் சன நெரிசல்மிக்க பகுதிகளிலிருந்து 11 இளைஞர்களைக் கடத்திக் காணாமலாக்கியமை தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 14ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட, நேற்றைய தினமும் நீதிமன்றத்தில் ஆஜரா​கி இருக்கவில்லை. இந்நிலையிலேயே, நீதிபதிகள் குழு, மேற்கண்ட உத்தரவைப் ​பிறப்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .