2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

'கரம்போட் வழக்கு' நிறைவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, கரம்போட் இறக்குமதியில் 53 இலட்சம் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இலஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் அறிவித்தது.

அதன்காரணமாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையை நிறைவுக்கு கொண்டு வருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கினை இன்றுடன் நிறைவுக்கு கொண்டு வருவதாக அறித்த பிரதான நீதவான், நீதிமன்றின் நோட்டீஸ் கிடைத்த பின்னர், பிரதிவாதிகளை விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .