2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி ஓ.ஐ.சிக்கு இடமாற்றம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சிப்பிட்டி வீதியை மறித்து மீனவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி கடல் பிரதேசத்தில் 'லைலா' வலைகளைப் பாவித்து மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மற்றொரு தரப்பு மீனவர்கள், கடந்த வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (21) அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதன்போது பொது மக்களின் மோட்டார் சைக்கிள்கள், மீனவப் படகுகள் மற்றும் லொறி என்பன தீக்கிரையாக்கப்பட்டதோடு, பலர் தாக்கப்பட்டு காயங்களுடன் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X