Editorial / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்
கற்பிட்டி குடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற சுமார் 405 கிலோ கிராம் பீடி இலைகள், ஒரு டிங்கி படகை கைப்பற்றியுள்ள கடற்படையினர், இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரைகள் உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
அதன்படி வெள்ளிக்கிழமை (03) இரவு கற்பிட்டிக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகு சோதனை செய்யப்பட்டது.
மேற்படி நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி முகத்துவாரம் மற்றும் பள்ளிவாசல் துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்கள சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.




25 minute ago
1 hours ago
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
09 Dec 2025