Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு- கண்டி வீதியின் கலகெடிஹேன பிரதேசத்தில் வானொன்றை மறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கணிதப் பேராசிரியர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இன்று ஆஜரான பேராசிரியருடன், மேலும் 3 சந்தேகநபர்களும் ஆஜரானதாகவும், இதுவரை இச் சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, 8 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினருக்கு அறிவித்ததன் பின்னர், நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த டிபென்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago