2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

’கல்விக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்படல் வேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிவால் ஒன்றிணைந்த இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக, நாட்டின் கல்விக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் 200 பாடசாலைகளில் 200 அபிவிருத்தித் திட்டங்களை ஒரே சமயத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஆரம்ப வைபவம், குளியாபிட்டியில், நேற்று (01) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் அபிவிருத்திசெய்து அவற்றுக்குத் தேவையான வளங்களை பூரணமாகப் பெற்றுக்கொடுப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், இதை, நாம் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனப் பெயரிட்டுள்ளதாகவும் எந்தவொரு பாடசாலையையும் புறக்கணிக்காமல் சகல பாடசாலைகளுக்கும் வளங்களை சமாந்தரமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

நாம் என்ன செய்தோம், என்ன செய்வோம் என்பதை எம்மை விமர்சிப்பவர்கள் விரைவில் கண்டு கொள்ளப் போவதாகக் கூறிய அவர், சில சந்தர்ப்பங்களில் அதிலும் குறைதேடிக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் கல்வித் துறையை மேம்படுத்துவதே பிரதானமானதாக இருந்தது என்றும் அதை தாம் அமைதியாக முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .