2026 மார்ச் 21, சனிக்கிழமை

காணாமல் போன சிறுமிகள் மூவரையும் தேடி வேட்டை

Editorial   / 2021 நவம்பர் 09 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை, இந்த மூன்று சிறுமிகளையும் திங்கட்கிழமை இரவு 8.10க்கும், 9.30 மணிக்கும் இடையில், ராஜகிரிய பிரதேசத்தில் கண்டதாக, அச்சிறுமிகளின் குடும்ப உறுப்பினரென தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X