Editorial / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
காதலியின் நிர்வாண படத்தை, இணையளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு, தலைமறைவாகியிருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அங்கு அப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர். எடுக்கப்பட்ட நிர்வாணப் படத்தை, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதன்பின்னர், அங்கிருந்து தலைமறைவாகி கொழும்பில் மறைந்து இருந்துள்ளார். எனினும், விசாரணைகளை முன்னெடுத்த மொனராகலை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர், பாதிக்கப்பட்ட யுவதி பேசுவதைப் போல, தொலைப்பேசி அழைப்பை எடுத்து, இளைஞனை ஒக்கம்பிட்டியவுக்கு வரவழைத்துள்ளனர்.
.ஒக்கம்பிட்டிய வீட்டுக்கு. இளைஞன் வரும்போது, இடைநடுவிலேயே மறித்த பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர். இவர், பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளார். அச்சம்பவங்களுக்காக தேடப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது.
அவர், பல பெண்களை காதலித்துள்ளார். அந்த காதலிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும், வீடியோக்களை எடுத்தும் வைத்துள்ளார். அவற்றை, உறவினர்கள் மற்றும் இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக,புத்தள பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago