Freelancer / 2026 மார்ச் 21 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானியக் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானிலிருந்து இரண்டு இடைநிலைத் தொலைவு ஏவுகணைகள்,டியேகோ கார்சியாவை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளன.
எனினும் இந்த இரண்டு ஏவுகணைகளும் இலக்கை எட்டவில்லை. டியேகோ கார்சியா தளம் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானிலேயே செயலிழந்து வீழ்ந்துள்ளதாகவும், மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ஏ.எம் -3 இடைமறிப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த முயற்சித்துள்ளது.
அந்த இடைமறிப்பு முழுமையாக வெற்றியடைந்ததா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
33 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago