Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மே 01 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுகுட்படுத்திய 25 வயது குடும்பஸ்தர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்க தெரிவித்தார்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் புர்கான் பள்ளிவாயலுக்கு அருகில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
அயல் வீட்டில் வசித்து வரும் தூரத்து உறவினரான மேற்படி சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்
25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த சந்தேக நபரின் மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
கைதான சந்தேக நபர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் உடலில் காயங்கள் காணப்படுவதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலை காவலர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காணொளி மூலம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியும் மட்டக்களப்பு பதில் நீதிபதியுமான ஏ.தர்ஷினி முன்னிலையில் காண்பித்த போது 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாதிப்புக்குள்ளான குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
22 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
35 minute ago