2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘ கிரிக்கெட் வீரர்களின் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருக்க வேண்டும்’

Editorial   / 2019 ஜனவரி 30 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களது சமூக வலைத்தளங்கள் பயன்பாடு சில வருடங்களுக்கு முன்பே முடக்கப்பட்டிருக்க வேண்டுமென, இலங்கை அணியின் முன்னாள் வீரர்  ரஷல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

ரஷல் ஆர்னல்ட் தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இலங்கை அணியின் பல வீரர்கள் சமூக வலைத்தளங்களால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளமைக் காரணமாகவே இவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக அண்மைக் காலமாக சமூகவைத்தளங்களில் மோதிக்கொள்ளும் இலங்கை அணியின் லசித் மாலிங்க, திஸர பெரேரா ஆகிய வீரர்களுக்கும் அவர்கள் இருவரினதும் மனைவியருக்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடை அடிப்படையக வைத்தே ரஷல் ஆர்னல்ட் இவ்வாறானதொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .