2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஹஸ்பர் ஏ ஹலீம், கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், அப்துல்சலாம் யாசீம், வடிவேல் சக்திவேல், ஒலுமுதீன் கியாஸ் 

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழுவின் தலைவராக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம், இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆனைக்குழு, அம்மாகாணத்தில் நியமனங்களை வழங்குதல், இடமாற்றங்களைச் செய்தல், உயர் பதவிகளுக்கு நபர்களை நியமித்தல் உட்பட அரச சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதி உயர் சபையாகும்.

இந்தச் சபையின் தலைவராகவே, பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம், கிழக்கு பல்கலைக்கழகத்தில் உப வேந்தராக இருந்து கடமையாற்றிய நீண்ட கால அனுபவமிக்கவர் என்பதால், ஆளுநரால், இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் இந்த ஆணைக்குழுவின் தலைவராக, கொழும்பைச் சேர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க கடமையாற்றியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .