2025 ஜூலை 09, புதன்கிழமை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப சட்ட வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மசோதா, சட்ட வரைவுத் துறைக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப இந்த மசோதா திருத்தப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் பல சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, எனினும், இது முழுமையாக திருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .