2026 மே 04, திங்கட்கிழமை

குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் பதில்

J.A. George   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை இலக்கு வைத்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்து தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர,  விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்படவில்லை என்று கூறினார்.

அத்துடன், இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் முழுமையான அரசியல் நோக்கங்களே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .