2025 ஜூலை 09, புதன்கிழமை

‘குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணம்’

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்குள் இடம்பெற்ற அமைதியின்மைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்புக் கூறவேண்டுமென, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் அவரது அக்கிராசனத்தில் இருந்தமையாலேயே அங்கு குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் சபாநாயகர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, அவரது அக்கிராசனத்திலிருந்து எழுந்து சென்றிருந்தால், இவ்வாறான குழப்ப நிலையொன்று ஏற்பட்டிருக்காது என்றும் அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆயுதங்களுடன் சபைக்கு வருகைத் தந்துள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .