2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்பை சந்தித்தார் அமெரிக்க முக்கியஸ்தர்

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைத் துணை உதவிச் செயலாளர் ஆலிஸ் ஜி.வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை கொழும்பில் வைத்து இன்று (14) சந்தித்து கலந்துரையாடினார். 

ஆலிஸ் ஜி.வெல்ஸ், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று (14) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், அமெரிக்க முக்கியஸ்தர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஆலிஸ், நாளை (15) வரை இலங்கையில் தங்கியிருப்பார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .