2026 மே 04, திங்கட்கிழமை

கை விரலை கடித்த இளைஞன் கைது

Editorial   / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 
 
பொலிசாரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் வௌ்ளிக்கிழமை வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிசாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.

காயத்துக்குள்ளான பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .