Editorial / 2023 நவம்பர் 09 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 38 பேரும் மன்னார் நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை(9) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2 படகுடன் இந்திய மீனவர்கள் 15 பேர், கடந்த மாதம் 16 ஆம் திகதியும், 3 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 23 பேர் கடந்த 29 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் 38 பேரும் வியாழக்கிழமை(9) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மன்னார் நீதவான் முன்னிலையில் வியாழக்கிழமை(9) ஆஜர் படுத்தப்பட்டனர்.
அந்த மீனவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 மாத சிறை தண்டனையும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும் குறித்த 5 படகுகளின் உரிமையாளர்களும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு இந்திய துணைத் தூதரகம் ஊடாக படகு உரிமையாளர்களுக்கு அறிவிக்கும் படி நீதவான் கட்டளையிட்டார். வழக்கு தொடுனரினால் முதலாவது குற்றவாளியாக படகுகளின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் மிகிரியாகம தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் உடமையில் இருந்த சில சான்றுப் பொருட்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 minute ago
24 minute ago
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
46 minute ago
59 minute ago