2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கைதிகள் தாக்குதல் சம்பவ அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான அறிக்கை இன்று நீதியமைச்சர் தலதா அத்துகோரளயிடம் கையளிக்கப்படவுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி கைதிகள் மீது இவ்வாறு தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மூவரடங்கிய முதலாவது குழுவின் அறிக்கையே அமைச்சரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய அமைச்சரால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையின் கீழ் இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

 இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மற்றைய குழுவின் அறிக்கை 25ஆம் திகதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .