2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘கொக்கெய்ன் குற்றச்சாட்டு குறித்து மௌனம் காக்க கூடாது’

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கெய்ன் தொடர்பில்  முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, பிரதான அரசியல் கட்சிகள் இரண்டின் உறுப்பினர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் கொக்கெய்ன் பயன்படுவத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து  தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கொக்கெய்ன் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை தாமதிக்காது வெளியிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பிரதான அரசியல் கட்சிகள் இரண்டின் தலைவர்கள், இந்த விடயத்தில் மௌனம் காக்க முடியாதென தெரிவித்த அத்துரலிய ரத்தன தேரர், முழு சமூகமும் இந்த விடயம் குறித்து அவதானத்துடன் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .