R.Maheshwary / 2021 மார்ச் 31 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
. எஸ். நிதர்ஷன்
கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென, யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தற்போது தனிமைப்படுத்தல் நிலையிலுள்ள அவர் நேற்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“யாழ் நகரில் சடுதியாக ஏற்பட்ட கொரோனா பரவலை அடுத்து, மாநகரத்தில் பல நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன. இதனால், வர்த்தகர்களும் பொது மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
“இதனைத் தொடர்ந்து வர்த்தகர்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இவற்றின் முடிவுகள் என்னும் வெளியிடப்படவில்லை.
“இவை தொடர்பில் பல முறைப்பாடுகள் வர்த்தகர்களிடம் இருந்தும் பொது மக்களிடமிருந்தும் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நான் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியுடன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்தேன்.
“குறித்த பரிசோதனைகள் கொழும்பில் மேற்கொள்ளப்படுவதால் அதன் முடிவுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது என்றும் பெரும்பாலும் அம்முடிவுகள் இன்று (நேற்று) கிடைக்கப்பெறலாம் என்றும் அறியக்கிடைத்துள்ளது.
“உறுதிப்படுத்தப்படாது கிடைத்த தகவலின்படி 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அறியக் கிடைக்கின்றது. விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும்.
“புது வருடம் அண்மிக்கின்ற நிலையில், விரைந்து வர்த்தக நிலையங்களைத் திறக்க வேண்டும் என்ற எனது கரிசனையை வெளிப்படுத்தினேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .