2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொரோனா குறித்த முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையிருப்பில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான பீசிஆர் மற்றும் அன்டிஜன் கருவிகள் காரணமாக, மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளைக் கண்டறிவதற்கு தெரிவு செய்யப்பட்ட முறையின் கீழ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படும் சூழ்நிலைகளுக்கு மாத்திரமே பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாளொன்றில் 25,000 பீசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட காலம் இருந்ததாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கருவிகளை கொள்வனவு செய்யமுடியாதுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, வைரஸைக் கட்டுப்படுத்த நமது அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .