2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளை சம்பவத்தில் பிரதேசசபை உறுப்பினர் கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் தனியார் வங்கிக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் இரண்டு பேரை ஆயுதங்களுடன் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X