2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொழும்பில் புதிய இராணுவ முகாம்கள்

Nirosh   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் அரசாங்கம் கொழும்பில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச இரகசியங்கள் சட்டத்தின் படி பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் இச்சட்டம் 67 வருடங்கள் பழமையானது. இது சட்டவிரோதமானச் செயற்பாடு. அமைச்சரவை இரகசியங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கே இச்சட்டம் உள்ளது. இதனூடாக பாதுகாப்பு வலயங்களை அமைக்க முடியாதென கூறினார்.

உயர் பாதுகாப்பு வலயங்களில் ஐஸ் விற்பனை செய்பவருக்குக் கூட பிரச்சினைகள் வரலாம். காலி முகத்திடலில் சென்று இனி பட்டாசுகளைக்கூட கொளுத்த முடியாது. இதுபோன்ற நாடொன்றுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X